இப்போது எல்லாம் எதுக்கு டிஜிட்டல் போர்டு வைக்கின்றது என்று விவஸ்தை இல்லாமல் போய்விட்டது, அதனால் தான் எல்லா ரோடு களிலும் மரம் இருக்கின்றதோ இல்லையோ கண்டிப்பாக டிஜிட்டல் போர்டு இருக்கின்றது, பிறந்த நாள் வாழ்த்து முதல் சாவு வீடு வரை கல்யாணம் முதல் அரசியல்வாதியை ஐஸ் வைக்கின்றது வரை டிஜிட்டல் போர்டு மயம் தான்,ஒரு பத்து வருடங்களுக்கு முன்புவரை வீட்டு விஷேஷம் என்றால் அது அவரவர் வீட்டோடு முடிந்து போய்விடும், இப்பொது ஊர் அறிய விளம்பரம் வைத்தல் தான் அதற்க்கு ஒரு அர்த்தம் என்று பாமரனும் நினைகின்றான், அதற்காக கடனையாவது வட்டிக்கு வாங்கி செலவு செய்கின்றான்,
போட்டோ ஷாப் யாருக்கு உபயோக படுகின்றதோ இல்லியோ இது கண்டுபிடிக்கப்பட்டது நிச்சயமகா நம்ம ஊர் அரசியல்வாதிளுக்கு பெரிதும் உதவி செய்கின்றது, அரசியல் கட்சிகள் அல்லது லோக்கல் தலைவர்களுக்கு வைக்கும் போர்டுடில் தான் காமேடி ஆரம்பிக்கின்றது , இதற்கு சில நடைமுறைகள் இருபது போல் தோன்றுகின்றது, ஓர் அரசியல் போர்டு என்றால் இடது பக்கம் MGR விரலை வாயில் வைத்து சிரித்துக் கொண்டு இருப்பார். அண்ணா தன்னுடைய வெற்றிலை பாக்கு போட்ட பல்லுடன் சிரித்துக்கொண்டு இருப்பார், இருகின்ற இறந்த தலைவர்கள் படங்கள் வட்ட வட்ட மகா போட்டு இருப்பார்கள், அதற்கு கீழே கலைஞரோ ஜெயலலிதாவோ இன்ன பிற தலைவர்களின் போட்டோ பெரிய சைஸ்ல் இருக்கும்,
இதற்கு வலது பக்கம் நம்முடிய விழா நாயகன் லோக்கல் தலைவர் வித விதமான கெட் அப்பில் போஸ் கொடுத்துக்கொண்டு இருப்பார், அவற்றில் சில அவர் வாயில் அல்லது கன்னத்தில் பேனாவை வைத்து எதோ கவேரிபிரசினைக்கு தீர்ப்பு எழுதும் rangeக்கு யோசித்துக்கொண்டு இருப்பார், அல்லது காதில் செல்போன் வைத்துக்கொண்டு பிகர் இடம் கடலை போடுவது போல் act கொடுபார், சில சமயம் எஜமான் படம் ரஜினி போல் தரையை தொடும் மலையோடு கும்பிட்டு கொண்டு நடப்பார், அப்படி இல்லை என்றல் தலைவர் படத்தை முன்று முறை காப்பி பேஸ்ட் செய்து இருப்பார்கள் இதற்கு அர்த்தம் தலைவர் 3 ஆள் பலத்துடன் இருக்கின்றார் என்று அர்த்தம் , சில விளம்பரங்களில் தலைவர் ஒரு சிங்கத்துடன் புலியுடன் சிறுத்தையுடன் நாய் போன்ற விலங்குகளுடன் இருப்பர், இதற்கு பொருள் என்னவென்றால் இந்த விலங்கும் தலைவரும் equal என்று அர்த்தம், அடுத்து தவறாமல் இடம் பேரும் வேஷம் தலைபகை கட்டிக்கொண்டு இருப்பார் , தலைவர் வாழ்நாளில் கோட் சூட் போட்டே இருக்க மாட்டார் ஆனால் போட்டோ ஷாப் புண்ணியத்தால் தலைவருக்கு கோட் சூட் போட்டு பெரிய தொழில் அதிபர் போல் மாற்றி இருப்பார்கள், கோட் சூட் போட்டுகொண்டு கையில் லேப் டாப் வைத்துக்கொண்டு netஇல் பிட்டு படம் பார்ப்பது போல் போஸ் கொடுப்பர், இப்படியாக பல வேஷங்கள் கெட் அப்ப்கள் என்று சொல்லிக்கொண்டு போகலாம், சொல்ல மரந்து விட்டேனே சில சமயம் ஆழ்கர் ஆற்றில் இறங்கும் திருவிழா போட்டோவுடன் நம்ம தலைவர் 10 அல்லது 15 பேர் முன்பு பேசிய பொது போடோவுடன் இணைத்து எதோ வரலாறு காணாத குடத்தில் பேசுகின்ற மாதிரி ஓர் தோற்றம் ஏற்படுத்தி இருப்பார்கள், சிலவேளை காந்தி, காமராஜர் போன்ற தலைவர்களின் பிளாக் அண்ட் ஒய்ட் படத்துடன் நம்ம லோக்கல் தலைவரும் பிளாக் அண்ட் ஒய்ட் படத்துடன் இருப்பார், இதற்கு அர்த்தம் தலைவர் நீண்ட நாள் அரசியல் வானில் சிறகடித்து பறகின்றார் என்பதாகும்,
இப்படியாக போட்டோ ஷாப் புண்ணியத்தில் தலைவரை வித விதமன கெட் அப்பில் மாற்றி அற்ப சந்தோஷம் பட்டு கொள்கின்றார்கள்,
அடுத்ததாக தலைவரை வாழ்த்தும் சொற்கள் இதற்கு ஒரு Dictionary போடலம் இதை எல்லாம் எப்படித்தான் யோசிப்பார்கள் என்றே தெரியவில்லை, விடிவெள்ளியே, நாளைய முதல்வரே, தமிழா, மாவீரனே இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்,
கடைசியாக வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் போட்டோ இருக்கும் இதை பார்க்கும்போது எதோ காணமல் போனவர் பற்றிய அறிவிப்பில் இருக்கும் போட்டோ போல் இருக்கும் அல்லது போலீஸ் ஸ்டேஷன் இருக்கும் போட்டோ போல் இருப்பதாய் நீங்கள் உணரலாம், இதுவே பேனர் வைப்பவர் பசையுள்ள ரியல் எஸ்டேட் தாதா அல்லது சாராய அதிபர் என்றல் கை விரல் கழுத்து எல்லாம் நகை போட்டுகொண்டு ஒரு கும்பிடு போட்டுகொண்டு இருப்பர்,
இந்த பேனர்களால் மக்களுக்கு எதாவது நன்மை விழிப்புணர்ச்சி மெசேஜ் இருகின்றத என்றல் ஒரு பைசாவுக்கு பலன் இல்லை, வைக்கின்ற கட் அவுட் காற்றில் மக்கள் தலையில் விழாமல் இருந்தால் அதுவே பெரிய நன்மை, ஆனால் இதை பார்த்து பொது மக்கள் தான் முகம் சுகின்ற்கள்,